தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல், டீசல் விலை: 45ஆவது நாளாக எந்த மாற்றமும் இல்லை! - Petrol and diesel prices in Chennai

சென்னையில் தொடர்ந்து 45ஆவது நாளாக இன்றும் (மே 21) ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

By

Published : May 21, 2022, 6:55 AM IST

Updated : May 21, 2022, 8:03 AM IST

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல், டீசல் உள்ளிட்டவையின் விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப தினம்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஒரு மாதமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 110.85 ரூபாய்க்கும், டீசல் விலை 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், தொடர்ந்து 45ஆவது நாளாக சென்னையில் இன்றும் (மே 21) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. மே 1ஆம் தேதி கமர்ஷியல் சிலிண்டர் விலையும், மே 6ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டது. அதேபோல், கமர்ஷியல் சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் மே 19ஆம் தேதி மீண்டும் உயர்ந்தது. அதன்பின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

தற்போது, டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 105.41 ரூபாய்க்கும், டீசல் 96.67 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் 120.51 ரூபாய்க்கும், டீசல் 104.77 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பெங்களூருவில் பெட்ரோல் 119.09 ரூபாய்க்கும், டீசல் 94.79 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: ஜிஎஸ்டி கவுன்சில் மாநில, மத்திய அரசுகளை கட்டுபடுத்தாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Last Updated : May 21, 2022, 8:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details