தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு மோசடி விவகாரம்: பல் மருத்துவரை காவலில் விசாரிக்க மனுதாக்கல்! - நீட் தேர்வு மோசடி

சென்னை: போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில், கைதான பல் மருத்துவரை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

Neet issue  நீட் தேர்வு மோசடி விவகாரம்  NEET exam fraud case  பல் மருத்துவர் பாலச்சந்திரன்  நீட் தேர்வு மோசடி  police custody
Neet issue

By

Published : Jan 6, 2021, 7:46 AM IST

மருத்துவக் கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் கொடுத்ததாக மாணவி தீக்சா, அவரது தந்தை பல் மருத்துவர் பாலசந்தரன் மீது பெரியமேடு காவல் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த பல் மருத்துவர் பாலச்சந்திரனை கடந்த 1 ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்து மாணவி தீக்சாவை தேடி வருகின்றனர். இந்நிலையில், சிறையிலடைக்கப்பட்டுள்ள பாலச்சந்திரனை காவலில் எடுத்து விசாரிக்க காவலர்கள் முடிவு செய்துள்ளனர்.

மனுதாக்கல்

அதற்காக, எழும்பூர் நீதிமன்றத்தில் 10 நாள்கள் காவல் துறை காவல் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை நாளை நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த வழக்கில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயராம் என்பவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோசடி

இடைத்தரகர் ஜெயராம் ரூ.25 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு இரண்டு மாணவிகளின் விவரங்கள், மதிப்பெண்களை இணைத்து போலி மதிப்பெண் உருவாக்கி கைதான பாலச்சந்திரனுக்கு கொடுத்தது தெரியவந்துள்ளது.

தீக்சா நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால், அவரது தந்தை பாலச்சந்தரன் கொடுத்த அழுத்தத்தால் தீக்சா கடும் மன உளைச்சளுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதன் பின்பே பாலசந்தர் இடைத்தரகரகராக அறிமுகமாகிய ஜெயராமிடம் பணம் கொடுத்து போலி மதிப்பெண் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அது தொடர்பாக பெரியமேடு காவல் துறையினர் பாலச்சந்திரனை காவலில் எடுத்து விசாரரிக்க உள்ளனர்.

இதையும் படிங்க:நீட் ஆள்மாறாட்ட வழக்கு - ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details