தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியதற்கு எதிரான மனு தள்ளுபடி

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்குத் தடைவிதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள்

By

Published : Sep 29, 2021, 7:58 PM IST

சென்னை:அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி, தமிழ்நாடு அரசு, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்துசெய்யக் கோரியும், அதற்குத் தடைவிதிக்கக் கோரியும் திருச்சி, துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப். 29) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்துள்ளதால், அரசு வேலை தேடுவோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

தமிழ்நாடு அரசுத் தரப்பில், இந்த அரசாணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை ஏற்கனவே உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முழுமையான விவரங்கள் இல்லாமல் மனு தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டனர்.

மேலும், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், இரண்டு ஆண்டுகளுக்கு நீதிமன்ற அனுமதி இல்லாமல் பொதுநல வழக்குத் தொடர மனுதாரருக்குத் தடைவிதித்தும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: புகையில்லா தீபாவளி: ஜனவரி 1 வரை பட்டாசு வெடிக்கத் தடை!

ABOUT THE AUTHOR

...view details