சென்னை நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள 40 அடி உயரமுள்ள மரத்தில் ஏறி, கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். மேலும் கையில் ஒரு பாட்டிலில் பெட்ரோலையும் வைத்திருந்தார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து தீயணைப்புத் துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்த எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர், அந்நபரை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்த போது, அந்த நபர் வைத்திருந்த பெட்ரோல் பாட்டில் கீழே விழுந்தது. இதையடுத்து மேலும் அதிக உயரத்திற்கு சென்ற நபரிடம் தீயணைப்புத் துறையினர், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.