தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலைகளைத் தொடும் சக்கர நாற்காலிகள் - மெரினாவில் நாளை முதல் புதிய வசதி - சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை

By

Published : Nov 26, 2022, 2:41 PM IST

உலக பிரசித்தி பெற்ற மெரினா கடலின் அழகை மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று ரசிக்கும் வகையில், 1.09 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பாதையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(நவ.27) திறந்து வைக்க உள்ளார்.

ஒவ்வொரும் ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்று திறனாளிகள் கடல் அழகை ரசிக்கும் வகையில், மெரினா கடற்கரையில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வந்த நிலையில் நிரந்தர பாதை அமைக்க கோரி மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர பாதை அமைக்க ஒப்பந்தம் கோரபட்டு மர பலகைகளை கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நிரந்தர பாதை அமைக்கும் பணிகள் கடந்த சிலமாதங்களாக நடைபெற்று நிறைவடைந்த நிலையில், மாற்று திறனாளிகளின் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பாதையை நாளை திறந்து வைக்க உள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை

நாளை திமுக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மற்றவர்களை போல் மாற்று திறனாளிகலும் கடலின் அருகிலிருந்து மெரினா கடலின் பேரழகை அழகை ரசிக்க முடியும். இதேபோல் பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் ஈ சி ஆர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை

இதையும் படிங்க:பொருநை இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details