சமீபகாலமாக காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொள்வது, சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
அதேபோன்று, தற்போது பெரம்பூரில் காவலர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பெரம்பூர் ரயில்வே காவல் துறையின் பெண் காவல் ஆய்வாளராக பணியாற்றிவருபவர் ஞான அருள் ராஜாமணி. இவருக்கும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் சாந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தில் ஈடுபடும் பெண் காவலர்கள் வீடியோ வைரல் இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டனர்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவே சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சாந்தி உட்பட காவல் நிலையத்திலிருந்த ஆறு பேரும் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் ஞான அருள் ராஜாமணியைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.