தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹாஸ்டாரில் வெளியாகும் பேரில்லூர் பிரீமியர் லீக்! - perilloor premier league ott release date

perilloor premier league: டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் மூன்றாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்” வரும் 5ம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

Perilloor Premier League
பேரில்லூர் பிரீமியர் லீக்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 4:16 PM IST

சென்னை: டிஸ்னி + ஹாட்ஸ்டார் சமீபத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள ஒரிஜினல் சீரிஸான ​​"பேரில்லூர் பிரீமியர் லீக்" டிரெய்லரை வெளியிட்டது. அரசியலை இதயம் வருடும் நகைச்சுவை கலந்து சொல்லும் அட்டகாசமான சீரிஸ் "பேரில்லூர் பிரீமியர் லீக்". இந்த சீரிஸ் வரும் ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் (Streaming) செய்யப்பட உள்ளது.

இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த டிரெய்லர், ஒரு கிராமம் அதன் மனிதர்கள் அவர்களிடையேயான உறவுகள், அரசியல் வேடிக்கைகள், வெடித்துச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை என அதிரடியான விருந்தளிக்கிறது "பேரில்லூர் பிரீமியர் லீக்".

நிகிலா விமல் மற்றும் சன்னி வெய்னுடன், இந்தத் தொடரில் விஜயராகவன், அஜு வர்கீஸ், அசோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர் மற்றும் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு பேரில்லூர் பிரீமியர் லீக்கை உண்மையிலேயே ரசிக்க வைக்கிறது.

E4 என்டர்டெயின்மென்ட் பேனரில் முகேஷ் R மேத்தா மற்றும் CV சாரதி தயாரித்துள்ள "பேரில்லூர் பிரீமியர் லீக்" சீரிஸை இயக்குநர் பிரவீன் சந்திரன் இயக்கியுள்ளார். தீபு பிரதீப் இந்த சீரிஸை எழுதியுள்ளார். ஒளிப்பதிவு இயக்குநரான அனூப் வி ஷைலஜா, கிராமப்புற கேரளாவின் சாரத்தை அசத்தலான காட்சிகளுடன் படம்பிடித்துள்ளார். அதே நேரத்தில் பவன் ஸ்ரீ குமாரின் தலைசிறந்த எடிட்டிங் இக்கதையைத் திரையில் அழகாக உயிர்ப்பிக்கிறது. முஜீப் மஜீதின் இசை இந்த சீரிஸை மெருகேற்றுகிறது.

"பேரில்லூர் பிரீமியர் லீக்" சீரிஸ் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி என ஏழு மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:10 பேர் பாராட்டினால் 50 பேர் திட்றாங்க… வருத்தப்பட்ட நயன்தாரா!

ABOUT THE AUTHOR

...view details