தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செயின் மற்றும் செல்போன் பறிப்பு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேர் கைது! - Shankar Jiwal

சென்னையில் பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்து திருடிய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செயின் மற்றும் செல்போன் பறிப்பு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேர் கைது!
செயின் மற்றும் செல்போன் பறிப்பு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேர் கைது!

By

Published : Dec 21, 2022, 11:01 PM IST

சென்னை: காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின் பேரில், காவல் தெற்கு மண்டலத்தில் செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

எழும்பூர் போலீசார் வாகன சோதனையில் சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 நபர்களை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் இருவரையும் விசாரணை மேற்கொண்ட போது மந்தவெளி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (20), திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த நித்திஷ் (20) என தெரியவந்தது.

மேலும் எழும்பூர், வேப்பேரி, திருவல்லிக்கேணி, அண்ணாசதுக்கம், கே.கே.நகர், அசோக்நகர், வடக்கு கடற்கரை, திருவான்மியூர், சாஸ்திரிநகர் மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளில் 15 செல்போன் பறிப்பு வழக்குகளில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.20,000 மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் நுங்கம்பாக்கம் பகுதியில் சாலையில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றவரிடமிருந்து, இருசக்கர வாகனத்தில் சென்று செல்போனை பறித்துச் சென்ற கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (23), திருவேற்காடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (23) ஆகிய இருவரை கைது செய்து செல்போன் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் மடிப்பாக்கம் காவல் நிலைய பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர்களிடம் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த, ஆலந்தூர் பகுதியில் சேர்ந்த குல்லாபாஷா(23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 7 1/2 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

அபிராமிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டுவந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த துஷ்யந்த்(19), ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ்(19) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:சாலையில் சென்ற கும்கி யானைகள்; செல்பி எடுத்த குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

ABOUT THE AUTHOR

...view details