தமிழ்நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுகின்றனர். இந்த சூழலில் சென்னையை அடுத்த பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக நீர் உரிஞ்சுகளை அமைத்து தண்ணீர் லாரிகளின் மூலம் தண்ணீர் திருட்டு நடைபெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.
தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட லாரிகளைச் சிறைபிடித்த பொதுமக்கள்
சென்னை: பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதிகளில் சட்ட விரோதமாக குடிநீர் திருடப்படுவதைக் கண்டித்து அரசு பேருந்து, தண்ணீர் லாரி ஆகியவற்றை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
protest
இந்நிலையில், இன்று காலை பட்டாபிரம் - பூந்தம்மல்லி சாலையில் உள்ள பாரிவாக்கம் பகுதியில் தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அவ்வழியே வந்த அரசு பேருந்தையும் சிறைபிடித்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே உடனடியாக இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.