சென்னை:பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில்வசிபவர்கள், தங்கி வேலை செய்பவர்கள், படிப்பவர்கள் என்று 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சிறப்பு பேருந்துகள், சொந்த வாகனம் என்று கடந்த வார இறுதியில் வெளியேறினர். பொங்கல் கொண்டாட்டங்கள் முடித்துவிட்டால், நேற்றிரவு முதல் மீண்டும் சென்னைக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் இன்று (ஜன 19) காலை முதல் அதிகப்படியானோர் பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதால் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து காவல்துறையினர் சீர் செய்து வருகின்றனர்.