சென்னை:சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன். இந்தச் சிறுவன் அங்குள்ள சிவன் கோயில் சாலையில் இரு சக்கர வாகனத்தில் அழுது கொண்டே சென்றுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த சிறுவனிடம் அழுவதற்கான காரணத்தை கேட்டுள்ளனர். அப்போது அந்த சிறுவன் சொன்ன செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
இதையும் படிங்க:வெயிலும் இருக்கும் மழையும் வரும்.. வானிலை ஆய்வு மையம் விடுத்த அப்டேட்!
அதாவது தான் வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிப்பதாகவும், தான் அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் லிப்ட் கேட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு லிப்ட் கொடுத்த அந்த நபர், தொடர்ந்து வாகனம் கொஞ்ச தூரம் சென்றபோது சிறுவன் இறக்கிவிட சொன்ன இடத்தில் நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்றுள்ளார். மேலும், அந்த சிறுவன் லிப்ட் கேட்டு ஏறி வந்த வண்டியை ஓட்டி வந்த நபர் தன்னிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி அழுதுள்ளார்.