உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. இந்தத் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்நிலையில் சென்னை அம்பத்தூர் காய்க்கறிச் சந்தையில் இன்று பொதுமக்கள் காய்கறிகள் வாங்க குவிந்தனர்.
காய்கறிச் சந்தையில் நெருக்கமாக மக்கள்: கண்டுகொள்ளாத காவல்துறை! - ambatur vegetable market
சென்னை: அம்பத்தூர் காய்கறிச் சந்தையில் பொதுமக்கள் இடைவெளியை கடைபிடிக்காமல் நெருக்கமாக கூடியதை தடுக்கும் வகையில் காவல்துறை எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காய்கறிச் சந்தையில் நெருக்கமாக மக்கள்: கண்டுகொள்ளாத காவல்துறை
அப்போது, ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நெருக்கமாக நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர். தொற்று பரவும் வகையில் பொதுமக்கள் கூடியதை தடுக்கும் வகையில் காவல்துறையினரோ, அரசு அலுவலர்களோ எவ்வித முன் முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் உள்ளனர். திடீரென பொதுமக்கள் அதிகமாக கூடியதால் மேலும், வைரஸ் தொற்று பரவும் என்ற அச்சம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மளிகைக் கடைகளுக்கு பொருள்களை எந்த நேரமும் எடுத்து செல்ல அனுமதி!