தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவப்படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் - பழ.நெடுமாறன் - etv bharat

மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

By

Published : Jul 19, 2021, 1:09 PM IST

சென்னை: இது குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு மேல் ஈழத் தமிழ் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் தமிழ்நாட்டிலேயே பிறந்தவர்கள்.

மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு

இந்தப் பிள்ளைகள் முகாம்களின் அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றன. மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு எழுத அவர்கள் விரும்பிய போது, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.

இந்த பிரச்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் குறிப்பிட்ட அளவுக்கு இடம் ஒதுக்கி நீட் தேர்வு எழுத அவர்களை அனுமதிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:+2 தேர்வு முடிவுகள் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details