பயணிகளின் உயிருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியது ரயில்வேயின் கடமை - நீதிமன்றம் - பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது ரயில்வேயின் கடமை
சென்னை: ரயில் பயணிகளின் உயிருக்குப் போதுமான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது ரயில்வே அலுவலர்களின் கடமை என்றும் தவறுகளில் இருந்து ரயில்வே அலுவலர்கள் எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை எனவும் உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
தவறுகளில் இருந்து ரயில்வே அலுவலர்கள் எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை -நீதிமன்றம் அதிரடி
சென்னையில் வசிக்கும் தனது தாயைச் சந்திக்க திண்டுக்கல்லிலிருந்து வந்த இந்துராணி என்ற 38 வயது பெண், புறநகர் ரயிலில் கோடம்பாக்கம் - நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணித்தபோது, ரயிலிலிருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது மரணத்துக்கு இழப்பீடு கோரி, ரயில்வே தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், பயணச்சீட்டு தொலைந்துவிட்டதால், அவர் பயணி அல்ல எனக் கூறி கோரிக்கையைத் தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது.