தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாமக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் - ஜி.கே மணி - gk mani

திருவள்ளூர்: அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வெற்றிக்கு ராணுவ வீரர்கள் போல் செயல்பட வேண்டும் என பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.

ஜிகே மணி

By

Published : Mar 30, 2019, 10:36 PM IST


திருவள்ளூர் மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் ஏ கே மூர்த்தி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் பரப்புரை செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருத்தணியில் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட பாமக மாநில தலைவர் ஜிகே மணி கூறியதாவது,

அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும், இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும். ஆனால் இதை சகிக்க கொள்ள முடியாமல் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூடடணிக் குறித்து அவதூறாக பேசி வருகிறார்.

கூட்டணிக் கட்சியினர் போர்க்களத்தில் வீரர்கள் எப்படி சுறுசுறுப்பாக செயல்படுகின்றனரோ அதுபோல் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details