தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமனம்! - தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பார்த்தசாரதியை தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார்.

துணை வேந்தர் நியமனம்

By

Published : May 31, 2019, 10:05 PM IST

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பார்த்தசாரதியை தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார். இவர் பதவி ஏற்றது முதல் மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார். இவர், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 22 ஆண்டுகள் ஆசிரியராவும், பேராசிரியராகவும் பணிபுரிந்த அனுபவம் பெற்றுள்ளவர்.

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பல்வேறுத் துறைகளில் நிர்வாக அனுபவமும் பெற்றவர். அந்தப் பல்கலைக் கழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு, தொழில்முனைவோர் துறை ஆகியவற்றின் நிறுவன இயக்குநராகவும் இருந்துள்ளார். பல்கலைக் கழகங்களில் கல்வியியல் குழுவின் உறுப்பினராகவும், திட்டத்துறையிலும் பணியாற்றி உள்ளார். 117 புதிய பாடங்களையும், 17 ஆராய்ச்சி மாணவர்களையும், 24 ஆராய்ச்சி கட்டுரைகளையும், 8 புத்தகத்தையும் எழுதியுள்ள இவர், ஆராய்ச்சியில் அனுபவம் மிக்கவர்" என்று குறிப்பிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details