தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான்காவது நாளாக தொடரும் சிறப்பாசிரியர்களின் காத்திருப்பு போராட்டம்! - part time teacher protest in chennai

சென்னை: பள்ளிக் கல்வி ஆணையர் அலுவலகத்தின் முன் நான்காவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

part time teachers protest
சிறப்பாசிரியர்களின் காத்திருப்பு போராட்டம்

By

Published : Feb 7, 2021, 5:29 PM IST

அரசுப் பள்ளிகளில் இசை, தையல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் மாணவர்களுக்கு கற்பிக்கும் பகுதி நேர சிறப்பாசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அலுவலகம் முன்பு நான்காவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது.

வளாகத்தில் கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையிலும்கூட ஆசிரியைகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியயை அன்புமணி, ’கடந்த 2012ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறோம். தற்போது 12,843 பேர் சிறப்பு ஆசிரியர்களாக பணியிலிருக்கிறோம்.

சிறப்பாசிரியர்களின் காத்திருப்பு போராட்டம்

அரசு பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி இணை செயல்பாடுகள் கற்பித்து வருகிறோம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட எங்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் அனைத்து நாட்களும் வேலை வழங்க வேண்டும் என்பதே ஒற்றைக் கோரிக்கை. எங்களின் கோரிக்கையை நிறைவேற்றும்வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றார்.

இதையும் படிங்க:அண்ணா வழியில் விமர்சனங்களை எதிர்கொள்கிறாரா தினகரன்?

ABOUT THE AUTHOR

...view details