தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் விவகாரம் - மகன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது பெற்றோர் புகார் - காதல் விவகாரம்

சென்னையில் காதல் விவகாரத்தில் மகன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த பெற்றோர்
செய்தியாளர்களைச் சந்தித்த பெற்றோர்

By

Published : Jul 1, 2022, 10:41 PM IST

சென்னை: ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமதி. இவர் அதிமுகவில் கடந்த 2016ஆம் ஆண்டு கவுன்சிலராக இருந்துள்ளார். இவரது மகன் கிருஷ்ணபாலாஜி உயர் நீதிமன்றத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக கிருஷ்ணபாலாஜி நீலாங்கரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பின்பு அவர் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்காததால் கிருஷ்ணபாலாஜி கடந்த மார்ச் மாதம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து திருமணமாகி 10 நாள்களில் கிருஷ்ணபாலாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெற்றோர் புகார்

இந்நிலையில் தனது மகன் தற்கொலைக்கு காரணமான அப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் ஆணையர் அலுவலகத்தில் உயிரிழந்த கிருஷ்ணபாலாஜியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணபாலாஜியின் தந்தை சேகர், “எனது மகனை காதலிப்பதாக கூறி அவர் ஏமாற்றி பணப்பறிப்பில் ஈடுபட்டார்.

வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி தனது மகன் சந்தோஷமாக வாழ்ந்து வருவதை பொறுத்துகொள்ளாமல் அப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மகனை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக தெரிவித்தார். இதனால் மனமுடைந்த தனது மகன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார். உடனடியாக தனது மகன் தற்கொலைக்கு காரணமான பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் தாங்கள் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details