கரோனா ஊரடங்கு காலத்தில் ஏகப்பட்ட திருமணங்கள் நடந்ததை நாம் பார்த்திருப்போம். கோவிட்-19 அச்சத்தால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருமணங்கள் நடந்தன. பெரும்பாலான திருமணங்களை மணமக்கள் தங்கள் உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும், சமூக வலைதளங்களில் நேரலை செய்தனர்.
இருப்பினும், வாழை இலையில் வடை, பாயாசத்துடன் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கல்யாண சாப்பாடு போடவில்லை என்ற குறை மண வீட்டாருக்கு இருந்தது. அந்த மனக்குறையை, நீக்கும் வகையில் சென்னையைச் சேர்ந்த நபர் தனது மகனின் கல்யாண சாப்பாடை நண்பர் நடத்தும் நிறுவனத்தின் உதவியுடன் தனது உறவினர்கள் வீட்டில் டெலிவரி செய்து அசத்தியுள்ளார்.
டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற அந்த திருமணம் சமூக வலைதளங்களில் நேரலை செய்யப்பட்டது. நேரலையின் முடிவில், உறவினர்களின் வீட்டில் கல்யாண சாப்பாடு டெலிவரி செய்யப்பட்டிருந்தது. நேர்த்தியாக நெய்யப்பட்ட இரண்டு கூடைகளில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கேரியர்களில் ரசம், புளி சாதம் முதல் பாயாசம்வரை பல்வேறு வகையான உணவுகள் இருந்தன. அதோடு, வாழை இலையும், தாம்புல பையும் இருந்தது.
என்ன என்ன உணவுகள் இருக்கிறது என்பதை விளக்கும் மேனு இதனை டெலிவரி செய்த யுனானு நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் சுந்தரராஜனை தொடர்பு கொண்டு பேசினோம். "இதை நாங்கள் முதல் முறையாக முயற்சி செய்தோம். மொத்தம் 700 தொகுப்புகளை 250 வீடுகளுக்கு டெலிவரி செய்தோம். அதில் பல சவால்கள் இருந்தன. தாம்பரம், அயனாவரம் பகுதிகளில் டெலிவரி செய்தோம். டெலிவரி பாய்ஸ் மூலம் இந்த கல்யாண சாப்பாட்டை நாங்கள் டெலிவரி செய்யவில்லை. அப்படி நாங்கள் செய்திருந்தால் அதில் எமோஷனல் டச் இருந்திருக்காது” என்றார்.
என்ன என்ன உணவுகள் இருக்கிறது என்பதை விளக்கும் மேனு கரோனா காலத்தில் உறவினர்கள் யாரும் இல்லாமல் திருமணத்தை நடத்தினாலும், அவர்களுக்கு கல்யாண சாப்பாட்டை கொண்டு சேர்த்த நபரின் வழியை இனி வரும் காலங்களில் பலரும் பயன்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.