தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனுக்கு வாக்கு சேகரிப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
குறை கூற ஸ்டாலினுக்கு அருகதை இல்லை- பழனிசாமி தாக்கு! - ஸ்டாலின்
சென்னை: திமுக ஆட்சி ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என்பதால், அதிமுக பற்றி குறை கூறுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "அதிமுக பற்றி குறை கூறுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனென்றால் திமுக ஆட்சி ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என விமர்சித்தார். இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருவதாகவும் சட்டம், வேளாண்மை, மருத்துவம் என அனைத்திலும் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று கூறினார்.
மேலும் மின்வெட்டு இல்லாததால், மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்தார். பின்னர் மீண்டும் வலிமையான தேசமாக இந்தியா மாற வேண்டுமென்றால் அதிமுகவுக்கு வாக்களியுங்கள்" என்றார்