தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளையாட்டு வீரர்களுக்கு ஜெயலலிதா அரசு எதையும் செய்யும்: எடப்பாடி பழனிசாமி - பழனிசாமி

சென்னை: ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு ரூ 10 லட்சம் பரிசுத் தொகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோப்புக்காட்சி

By

Published : May 2, 2019, 3:18 PM IST

இது குறித்துமுதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டை சேர்ந்த கோமதி மாரிமுத்து கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.

இதன் மூலம் அவர் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரைப் பாராட்டி ஏப்ரல் 24ஆம் தேதி வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தேன். விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் தங்கப்பதக்கம் வெல்வதற்கு அரசால் உயரிய ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுவருகிறது.

அதன் அடிப்படையில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்த கோமதி மாரிமுத்துவுக்கு உயரிய ஊக்கத்தொகை 10 லட்சம் ரூபாயும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தொடர் ஓட்டப் பந்தய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கியராஜூவுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 5 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

கோமதி மாரிமுத்து மற்றும் ஆரோக்கிய ராஜூ ஆகிய இருவரும் மென்மேலும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகள் பல பெற தேவையான அனைத்து உதவிகளையும் ஜெயலலிதா அரசு செய்துதரும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொண்டு எனது வாழ்த்துகளையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details