சென்னை:இதுதொடர்பாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2009ஆம் ஆண்டில் இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள ராணுவத்தினர், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்களை ஈவிரக்கமின்றிப் பதறப் பதறப் படுகொலை செய்தனர்.
ஈழத் தமிழர்கள் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு ஆளாயினர். இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் இனப் படுகொலை நாளாக கடைப்பிடித்து கொலையுண்ட மக்களை நினைவு கூர்ந்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நாளாகும்.