தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அருகம்புல்லை கொண்டு விநாயகர் படத்தை வரைந்து ஓவிய ஆசிரியர் அசத்தல்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பழமொழிக்கு ஏற்ப பிரஷ்க்கு பதிலாக அருகம்புல்லை கொண்டு விநாயகர் படத்தை வரைந்து ஓவிய ஆசிரியர் அசத்தியுள்ளார்.

அருகம்புல்லை கொண்டு விநாயகர் படத்தை வரைந்து அசத்தல்
அருகம்புல்லை கொண்டு விநாயகர் படத்தை வரைந்து அசத்தல்

By

Published : Aug 30, 2022, 10:32 PM IST

Updated : Aug 31, 2022, 10:12 AM IST

சென்னை:விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டும், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டியும் "அருகம்புல்லை" கொண்டு விநாயகர் ஓவியத்தை வரைந்தார்.

சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணி புரிந்துவருகின்றனர். குறைந்த நேரம், குறைந்த ஊதியம் வாழ்வாதாரம் இன்றி வாழ்வதற்கு கஷ்டப்படுகிறோம்.

விநாயகர் படத்தை வரைந்து ஓவிய ஆசிரியர் அசத்தல்

தமிழ்நாடு அரசாங்கம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், முழு முதற்கடவுளான விநாயகர் அருள் புரிய வேண்டியும், "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" என்ற பழமொழிக்கு ஏற்ப விநாயகருக்கு பிடித்த "அருகம்புல்லை" கொண்டு நீர் வண்ணத்தில் அருகம்புல்லை தொட்டு விநாயகர் உருவத்தை 18 நிமிடங்களில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள், அவரை பாராட்டினர்.

இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்திக்கு ஆளுநர் வாழ்த்து

Last Updated : Aug 31, 2022, 10:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details