சென்னை: பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வந்தவர் அனுராதா. இவர் தனது துறை மாணவர்களிடம் தொலைபேசியில் சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் விதமாக கடந்த 18ந் தேதி பேசியது, 19ந் தேதி சமூக வளைதங்களில் வைரலாக பரவியது. மேலும் அந்த ஆடியோவில், 'முகத்தைப் பார்த்தாலே BC-யா? MBC-யா அல்லது SC-யா எனத்தெரிந்துவிடும். நீ என்ன கம்யூனிட்டி என்பது கூட எனக்கு தெரியாது. நீ என்ன கம்யூனிட்டி?’ என்று கேட்டு தமிழ்த்துறை மாணவர்களின் குறிப்பிட்ட சிலரின் பெயரை உச்சரித்து கம்யூனிட்டி குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த விவகாரம் குறித்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் கஸ்தூரியிடம் விளக்கம் கேட்டபோது, 'வரும் திங்கட்கிழமையன்று(ஆக.22) ஒழுங்கு நடவடிக்கை குழு பேராசிரியை அனுராதாவிடம் விசாரணை நடத்த இருக்கிறது. இதனைத்தொடர்ந்து அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று கல்லூரி முதல்வர் கஸ்தூரி தெரிவித்திருந்தார்.