தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரும், திமுக பொதுச்செயலாருமான க. அன்பழகன் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவையொட்டி, திமுக சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவரும்நிலையில், மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
க.அன்பழகன் மறைவுக்கு ப.சிதம்பரம் இரங்கல்! - மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்
திமுகவின் 47 ஆண்டு கால பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக, மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் ட்விட் செய்துள்ளார்.
P Chidambaram tweet
அதில், 'திமுகவின் மூத்த தலைவர் மற்றும் அக்கட்சியின் 47 ஆண்டு கால பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:‘அன்பழகன் காலமான செய்தியறிந்து வருத்தமுற்றேன்’ - டிடிவி தினகரன்