கரோனா தடுப்பூசிகளின் விலை ஏற்றம், மத்திய, மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் வெவ்வேறு விலையை நிர்ணயம் செய்துள்ளது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஈடிவி பாரத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்த செயல் சட்ட விரோதமானது என தெரிவித்துள்ளார். பெருந்தொற்று போன்று தேசிய பேரிடர்களில் இந்திய காப்புரிமை சட்டத்தில் 'compulsory licensing' எனும் பிரிவின்படி ஒரு நிறுவனத்தின் அறிவுசார் சொத்துரிமையை மற்ற நிறுவனங்கள் தயாரிக்க இடமுள்ளதாகவும், இதன்மூலம் கரோனா தடுப்பூசியின் விலை குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.