இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் முன்னதாகவே இருந்த பரிசோதனை மையங்களுடன் கூடுதலாக மூன்று பரிசோதனை மையங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் மாநிலத்தில் பரிசோதனை மையங்கள் 125ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 52 ஆயிரத்து 955 நபர்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த ஐந்தாயிரத்து 35 நபர்களுக்கும், நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 28 நபர்களுக்கும் என மொத்தம் ஐந்தாயிரத்து 63 நபர்களுக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 27 லட்சத்து 86 ஆயிரத்து 250 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 285 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது 55 ஆயிரத்து 152 நபர்கள் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் ஆறாயிரத்து 501 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 784 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று 108 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 349ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்...
சென்னை - 1,04,027
செங்கல்பட்டு - 15,917
திருவள்ளூர் - 15,096
மதுரை - 11487
காஞ்சிபுரம் - 10303
விருதுநகர் - 9269
தூத்துக்குடி - 8035
திருவண்ணாமலை - 6793
வேலூர் - 6526
தேனி - 6261
ராணிப்பேட்டை - 5930
திருநெல்வேலி - 5797
கோயம்புத்தூர் - 5688
கன்னியாகுமரி - 5435
திருச்சிராப்பள்ளி - 4603
விழுப்புரம் - 4162
கள்ளக்குறிச்சி - 4055