தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் - தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு! - இலாகா இல்லாத அமைச்சர்

துறை ஏதும் இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் - உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு!
செந்தில் பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் - உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு!

By

Published : Aug 4, 2023, 5:16 PM IST

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, துறை ஏதும் இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த தனது உத்தரவை ஆளுநரே நிறுத்தி வைத்ததை எதிர்த்தும், தேசிய மக்கள் கட்சி தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து இருந்தார்.

அதேசமயம் எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் அளிக்க ஆளுநர் மாளிகை மற்றும் தமிழக அரசு ஆகியோருக்கு உத்தரவிடக்கோரி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி.,யான ஜெ.ஜெயவர்த்தன் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ-வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த அனைத்து வழக்குகளின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி P.D.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே பதவியில் இருந்து நீக்கலாம். முகாந்திரம் இருப்பதாகக் கூறி அமலாக்கத்துறை கைது செய்தது என்பதற்காக அமைச்சர் பதவியில் தொடர்வதை எதிர்க்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், ஆளுநர் தனிப்பட்ட முறையில் ஒருவர் பதவியில் நீடிப்பது அங்கீகரிக்கவோ? நிராகரிக்கவோ? உரிமை உள்ளது. அரசியலமைப்பு அந்த அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கி உள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை திரும்பப்பெற அவசியம் இல்லாத, ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்குளில் அனைத்து தரப்பின் வாதங்களும் ஜூலை 28ஆம் தேதி நிறைவு அடைந்த நிலையில், அனைத்து தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்களை இன்று (ஆகஸ்ட் 4ஆம் தேதி) தாக்கல் செய்தனர். இதனையடுத்து, வழக்குகளின் மீதான தீர்ப்பை தலைமை நீதிபதி அமர்வு, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உள்ளது.

இதையும் படிங்க: 'அதிமுகவை விமர்சித்தால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும்' - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details