தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த உத்தரவு - etv bharat

தமிழ்நாட்டில் ஊரடங்கு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த உத்தரவு
ஊரடங்கு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த உத்தரவு

By

Published : Jul 30, 2021, 8:00 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஜூலை 31 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று (ஜூலை. 30) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்று பரவல்; அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தவிர கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 9 காலை 6.00 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதி மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறையினர் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன் கருதி முடிவு செய்யலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details