சமஸ்கிருதம் பயிலும் மாணவர்கள் அந்த பாடத்தில் 60 விழுக்காட்டுக்கும் மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது. அந்த உதவித் தொகையை பெறக்கூடிய தகுதி உள்ள மாணவர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களின் விவரம் அனுப்ப உத்தரவு - சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை
சென்னை: மத்திய அரசு உதவித்தொகை பெறும் சமஸ்கிருத மாணவர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
9 முதல் 12ஆம் வகுப்பு வரை பெறக்கூடிய மாணவர்கள் இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள் ஆவர். இந்த மாணவர்களின் விவரங்களை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படவில்லை. சில அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், சில தனியார் பள்ளிகளில் மட்டுமே சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகின்றது.
குறிப்பாக சமஸ்கிருதத்தை ஊக்குவிக்கும் மத்தியரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே தற்போது பள்ளிக்கல்வித்துறை இந்த விவரங்களை கோரியுள்ளது.