சென்னை: தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில எல்லையில் கேரள அரசு டிஜிட்டல் முறையில் மறுநிலை அளவை பணியினை நவம்பர் ஒன்றாம் தேதி முதல் துவங்கி உள்ளதாக செய்திகள் வருவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
கேரளா மாநிலம், தொடுபுழா மறுநில அளவை அலுவலக உதவி இயக்குநர், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பொது எல்லையில் அமையப்பெற்ற கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், உடும்பன் சோலை வட்டத்தினைச் சார்ந்த சின்னக்கானல், சதுரங்கப்பாறை, கருணாபுரம், சாந்தான்பாறை ஆகிய கிராமங்களில் டிஜிட்டல் நில அளவை பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, அந்த கிராமங்களின் இருமாநில பொது எல்லைகள், தேனி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளதால் அது தொடர்பான அரசின் பழைய பதிவேடுகளில் உள்ள பழைய அளவுகளை சரிபார்த்திட கூட்டம் நடத்துவதற்கு, தேனி மாவட்டத்தின் நிலஅளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநருக்கு உத்தரவிட்டு அனைத்து ஆவணங்களையும் தயார் செய்துவிட்டு, கேரள அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.