தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் போக்குவரத்து துறை செயலர் விளக்கமளிக்க உத்தரவு! - வாகனங்களின் தகுதிச் சான்றிதழ்

வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Order to explain to Secretary of Transport in case of contempt of court
Order to explain to Secretary of Transport in case of contempt of court

By

Published : Dec 1, 2020, 6:23 PM IST

சென்னை:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கனரக, இலகு ரக வாகனங்கள், வேன்கள், லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்ணன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொறுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க எந்த ஒரு நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர்.

வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் பெறும்போது மட்டும் வேகக் கட்டுப்பாட்டு கருவியை பொறுத்தி வருவதாக குறிப்பிட்டனர். பின்னர் அது பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து கண்காணிக்க எந்த ஒரு தொழில் நுட்பமும் இல்லை. வாகனங்களில் ஒளிரும் பட்டை, இன்டிகேட்டர் விளக்கு எதையும் முறையாக பயன்படுத்துவதில்லை.

வாகனங்களில் போக்குவரத்து துறை அலுவலர்கள் பயணித்தால் மட்டுமே உண்மை நிலை தெரிய வரும். ஆட்டோக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மிரர் வியூ கண்ணாடிகளை வெளியே பயன்படுத்துகின்றனர். உட்புறமாக பயன்படுத்தாமல் வெளியே பயன்படுத்தி வரும் ஆட்டோக்கள் மீது என்ன நடவடிக்கை அரசு எடுத்துள்ளது? எனக் கேள்வி எழுப்பினர்.

அப்போது போக்குவரத்து துறை சார்பில் ஆஜரான கூடுதல் செயலர், வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை கண்காணிக்க பறக்கும் படை உள்ளதாகவும், விதிகளை மீறிய வாகனங்கள் மீது, லட்சத்துக்கு மேற்பட்ட வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால், அரசின் பதிலை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். அப்போது போக்குவரத்து துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: விபத்தில் தொழிலாளி பலி: 24 லட்சம் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details