தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 144 இடங்களில் ரூ.120 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள்! - மழைநீர் வடிகால் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னையில் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய 144 இடங்களில் ரூ.120 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை
சென்னை

By

Published : Dec 26, 2021, 11:00 PM IST

சென்னை: கடந்த காலங்களில் பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் மழைநீர் தேங்கிய பல்வேறு இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களின் ஆலோசனைகளின்படி,

விடுபட்ட மழைநீர் வடிகால்களை இணைக்கவும், பழுதடைந்த மழைநீர் வடிகால்களை புனரமைக்கவும், தேவையான இடங்களில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கவும் மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டு, அதுகுறித்து விரிவான திட்ட அறிக்கை அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்படி முதற்கட்டமாக சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளான தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களுக்குட்பட்டப் பகுதிகளில் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய 144 இடங்களில் 45 கி.மீ. நீளத்திற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டதை உலக வங்கி நிதியுதவியுடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Omicron Spreads: பள்ளி,கல்லூரிகளை மூட வேண்டும் - தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்

ABOUT THE AUTHOR

...view details