சென்னை:நாளை திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.