தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துரிதகதியில் சென்னை வந்த ஓபிஎஸ்... அடுத்து என்ன செய்யப்போகிறார்? - தேனி

தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தேனி மாவட்டம் சென்ற ஓ. பன்னீர்செல்வம் திடீரென சென்னை வருகை தந்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

By

Published : Jun 27, 2022, 4:15 PM IST

சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று (ஜூன் 26) சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கிருந்து தேனி சென்ற பன்னீர்செல்வம் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து தேனியில் நிர்வாகிகளுடன் மூன்று நாள்கள் ஆலோசனையில் ஈடுபடுவார் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜூன் 27) சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியாது என்றும், அது சட்டப்படி செல்லாது என்றும் அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் திடீரென அவசரமாக இன்று தேனியில் இருந்து புறப்பட்டுச்சென்று மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி, ஆலோசனைக் கூட்டம் நடந்ததைப் பற்றி கேள்வி கேட்டனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

அதற்கான விரிவான அறிக்கை நேற்றைய தினமே கொடுத்துவிட்டேன் எனக்கூறிவிட்டு பன்னீர்செல்வம் அவசரமாக காரில் புறப்பட்டுச்சென்றார். மேலும், சென்னையில் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:VIDEO: கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் முகம்... அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு...

ABOUT THE AUTHOR

...view details