அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ''சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எம்எல்ஏக்கள் ஒன்று கூடி அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பார்கள். ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். தலைமையில் அதிமுக இயங்கும்'' என தெரிவித்திருந்தார்.
முன்னதாக, இலக்கை நிர்ணயித்து களம் அமைப்போம், எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அமைச்சர்கள் இருவரும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்திருப்பது அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தொடர்ந்து மூன்றாவது முறையாக 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அஇஅதிமுகவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அடுத்த பதிவில், ‘தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நானே முதலமைச்சர் வேட்பாளர்: இரட்டை இலை இல்லாமல் எடப்பாடியால் ஜெயிக்க முடியுமா - கே.சி. பழனிசாமி