தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ஓபிஎஸ் ஆளில்லாத கடையில் டீ ஆற்றுகிறார்’ - ஜெயக்குமார் விமர்சனம்! - DMK

‘ஓபிஎஸ் புதிய நிர்வாகிகளை நியமிப்பது, ஆளில்லாத கடையில் டீ ஆற்றுவது போல் உள்ளது’ என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

‘ஓபிஎஸ் ஆளில்லாத கடையில் டீ ஆற்றுகிறார்’ - ஜெயக்குமார் விமர்சனம்!
‘ஓபிஎஸ் ஆளில்லாத கடையில் டீ ஆற்றுகிறார்’ - ஜெயக்குமார் விமர்சனம்!

By

Published : Jul 25, 2022, 4:22 PM IST

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது, “குடியரசுத்தலைவராக பொறுப்பேற்று இருக்கும் திரெளபதி முர்முவுக்கு, அதிமுக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். சொத்து வரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

திமுக அரசைக் கண்டித்து, சென்னையில் இதுபோன்ற ஆர்ப்பாட்டத்தைக் கண்டதில்லை என்றவாறு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வருகிற 27ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதுதொடர்பாக அதிமுக அமைப்பு சார்பில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். அவர்களுடன் ஆலோசனை செய்துள்ளோம்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து, வேண்டுமென்றே தவறான தகவல்கள் செய்தியாக பரப்பிவிடப்படுகின்றன. சென்னைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி சந்தித்து, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகள் குறித்து மனு அளிப்பார்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு உரிமைத்தொகை, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட திமுக அரசு அளித்த எந்த விதமான வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. திமுக அறக்கட்டளைகளில் உள்ள பணத்தை வைத்து, மெரினா கடற்கரையில் கருணாநிதி பேனாவை வைக்கட்டும்.

இந்த அரசாங்கம் விளம்பர அரசியலுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகழைப்பாடுகின்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு லேபிள் ஓட்டுவது, பெயிண்ட் அடிப்பது போன்றுதான் திமுக அரசு செய்து வருகிறது.

‘ஓபிஎஸ் ஆளில்லாத கடையில் டீ ஆற்றுகிறார்’ - ஜெயக்குமார் விமர்சனம்!

பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு குறைக்க வேண்டும். அரிசி உள்ளிட்டப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி உயர்த்தியதற்கு, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் புதிய நிர்வாகிகளை நியமிப்பது என்பது, ஆளில்லாத கடைக்கு டீ ஆற்றுவது போல் ஆகும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை மீது ரூ.1.59 லட்சம் கோடி கடன் வைத்தது ஏன்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

ABOUT THE AUTHOR

...view details