அதிமுக சார்பில் ஒ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நடந்து முடிந்த தேர்தலில் கிடைத்துள்ள வாக்குகளின் அடிப்படையில் தமிழ்நாட்டை ஆள அதிமுக தகுதியான கட்சி என்பதை மக்கள் நிரூபித்துள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்திருந்தாலும், அதிமுகவின் அடிப்படை வாக்குவங்கியை அதிமுக தக்கவைத்துள்ளது. மக்கள் அளித்த தீர்ப்பிற்கு தலை வணங்குகிறோம்.
வாக்கு வங்கியை நிலைநாட்ட வாக்களித்ததற்கு நன்றி! - participating i
சென்னை: நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அடிப்படை வாக்கு வங்கியை நிலைநாட்ட வாக்களித்தவர்களுக்கு நன்றி என அதிமுக ஒருங்கிணையாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
வாக்களித்ததற்கு நன்றி
மக்கள் விரும்பும் நல்லாட்சியை தொடர்ந்து வழங்குவோம். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக பெற்ற மாபெரும் வெற்றி அவரின் உழைப்பிற்கு கிடைத்ததாகும். தேசியமும் ஆன்மிகமும் இரு கண்களாகக் கொண்டு நாட்டுக்கு உழைத்தவர் நரேந்திர மோடி " எனபுகழாரம் சூட்டியுள்ளனர்.