நடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. அதிமுக சார்பாக போட்டியிட்டவர்களில், தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மட்டுமே வெற்றிபெற்றார். இந்நிலையில், எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதலமைச்சர் மரியாதை - jayalalitha memorial
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மரியாதை செலுத்தினார்.
ops - opr
மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், எம்.பி ரவீந்திரநாத் குமாரும் மரியாதை செலுத்தினர். இவர்களுடன் அதிமுக தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.