நாட்டின் முன்னணித் தலைவர்கள், ஊடகவியலாளர்களை பெகாசஸ் என்ற மென்பொருள் கொண்டு உளவு பார்த்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.
தி வயர், வாஷிங்டன் போஸ்ட், கார்டியன் உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் இது தொடர்பான விசாரணைக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் மற்றும் மூத்தத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெகாசஸ் விவகாரம்
மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'பெகாசஸ் விவகாரம் மூலம் உளவு பார்த்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மோடி அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது.
இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மக்களவையின் எதிர்க் கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது. முதன் முறையாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபடுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய மூத்த பத்திரிகையாளர் என்.ராம்