சென்னை: நாடாளுமன்றத்தேர்தலில் ரவீந்திரநாத் வெற்றிபெற்றது செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாடாளுமன்றத்தேர்தலில் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லாது - உயர் நீதிமன்றம்! - OP Ravindranath
நாடாளுமன்றத்தேர்தலில் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர் நீதிமன்றம் அறிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
op ravindranath
தேனி மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிமுக எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வாக்காளர் மிலானி தொடர்ந்த தேர்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளார். இருப்பினும், ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பு கோரிக்கையை ஏற்று 30 நாட்கள் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்வதற்காக இத்தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Last Updated : Jul 6, 2023, 2:58 PM IST