சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் 'சனாதன எதிர்ப்பு மாநாடு' நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கௌரி சங்கர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு நினைவு பரிசினை வழங்கினார்.
'இருதரப்பு நலனை மத்தியஸ்தர்கள் யோசித்தால் மட்டுமே சுமுக தீர்வு' - தொல்.திருமா! - thirumavalan
சென்னை:"மத்தியஸ்தர்கள் குழுவில் இருதரப்பு நலன்களை சிந்திக்க கூடியவர்கள் இடம் பெற்றால் மட்டுமே, அயோத்தி பிரச்னைக்கு சுமுகமான தீர்வை எட்ட முடியும்" என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அயோத்தி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டு இருக்கும் குழு, இருதரப்பு நலன்களை சிந்திக்க கூடியவர்களாக இடம் பெற்றால் மட்டுமே அயோத்தி பிரச்னைக்கு சுமுக தீர்வை காண முடியும். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கலாம் அல்லது பதற்றத்தை உருவாக்கலாம் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பிரேமலதா விஜயகாந்த் நேற்று செய்தியாளர்களையும், திமுக பொருளாளர் துரைமுருகனையும் ஒருமையில் பேசியுள்ளார். இது தமிழக அரசியல் அநாகரிக வழியில் பயணிப்பதையே காட்டுகிறது. இந்த சம்பவம் மிகுந்த வேதனையை தருகிறது. நாகரிக வரம்புகளை மீறாமல் விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.