தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும், இதர மாவட்டங்களில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது.
அதன்படி, இரண்டு கட்ட தேர்தலாக நடத்தத் தமிழ்நாடு அரசு முடிவுசெய்து முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (அக்.6) காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணிக்கு நிறைவடைந்தது.
இதனிடையே விழுப்புரம் மாவட்டம் ஈச்சாங்குப்பம் கிராம பஞ்சாயத்துக்கான துணை வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதுடன் பள்ளி மாணவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழரசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.