மே 17 அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. இவர், ஈழத் தமிழர்கள் பிரச்னை, காவிரி பிரச்னை, சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக, அவர் மீது திருவல்லிக்கேணி, வள்ளுவர் கோட்ட உள்ளிட்ட காவல் நிலையங்களில் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி திருமுகன் காந்தி, தனித்தனியாக எட்டு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
'என் மகளைத் தவிர வேறுயாரும் பின்னணியில் இல்லை' - திருமுருகன் காந்தி - திருமுருகன் ட்விட்டர்
சென்னை: "என்னுடைய பின்னணியில் மகளைத் தவிர வேறு யாரும் இல்லை" என்று, தனது ட்விட்டர் பக்கத்தில் திருமுருகன் பதிவிட்டுள்ளார்.
மேலும், திருமுருகன் காந்தியின் பேச்சுக்களை பார்க்கும் பொழுது காவல் துறையினர் வழக்குத் தொடர அனைத்து முகாந்திரமும் உள்ளது. அவர் பின்னணியில் யாரேனும் செயல்படுகிறார்களாக என்று விசாரிக்க காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் " என் பின்னணியில் என் மகளைத் தவிர வேறு யார் இருப்பார்கள். அவளின் உலகம் களவாடப்படுவதை என்னை தவிர வேறு யார் தடுப்பார்கள். அவளின் நீர், நிலம், ஆறு, கடல், காற்று கார்ப்பரேட்டுக்கு விற்கப்பட்டு மாசுபடுவதை அப்பாவாக நான்தானே எதிர்க்கவேண்டும். அவள், அவளுடைய தலைமுறையின் உரிமைக்கான முகமே நான்" என திருமுருகன் காந்தி பதிவிட்டுள்ளார். அந்த பதிவோடு தன் மகளுடன் அவர் எடுத்துக்கொண்டு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.