தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையின் சில மண்டலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க தொடர்ந்து கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தண்டையார்பேட்டை, அண்ணா நகர் போன்ற மண்டலங்களில் தற்போது அதன் பரவல் சற்று குறைந்துள்ளது. இதுவரையிலும் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 650 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 698 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 11 ஆயிரத்து 498 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 10 விழுக்காட்டினர் மட்டுமே தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக, அம்பத்தூரில் ஆயிரத்து 494 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 2.10 விழுக்காட்டினர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்றினால் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மண்டல வாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. அப்பட்டியல் பின்வருமாறு:
ராயபுரம் - 769 பேர்
திரு.வி.க. நகர் - 689 பேர்
வளசரவாக்கம் - 1026 பேர்
தண்டையார்பேட்டை - 539 பேர்
தேனாம்பேட்டை - 785 பேர்