தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் ரம்மி விளையாட்டு: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கை தாக்கல் - விரைவில் அவசரச் சட்டம் ?

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவினர் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு: ஸ்டாலினிடம் அறிக்கையை வழங்கிய நீதிபதி சந்துரு - விரைவில் அவசரச் சட்டம் ?
ஆன்லைன் ரம்மி விளையாட்டு: ஸ்டாலினிடம் அறிக்கையை வழங்கிய நீதிபதி சந்துரு - விரைவில் அவசரச் சட்டம் ?

By

Published : Jun 27, 2022, 11:54 AM IST

Updated : Jun 27, 2022, 1:19 PM IST

சென்னை:ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இந்த விளையாட்டுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், இரண்டு வாரங்களுக்குள் குழுவின் பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க கடந்த 10 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கை தாக்கல் - விரைவில் அவசரச் சட்டம் ?

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்குள் பரிந்துரைகளை அளிக்குமாறு அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி சந்துரு தலைமையில் 5 பேர் கொண்ட குழு இன்று (ஜூன்.27) அறிக்கையை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து, குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் தொடரும் உயிரிழப்புகளும்... மீளும் வழிமுறைகளும்...

Last Updated : Jun 27, 2022, 1:19 PM IST

For All Latest Updates

TAGGED:

cm

ABOUT THE AUTHOR

...view details