தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மூலம் இளைஞர்கள் ஈடுபட்டு தங்களது பணத்தை இழந்து, கடனைத் திருப்பித் தர முடியாமல் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவந்தது. இதனால், தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்யக் கோரி எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்திருந்தனர்.
சென்னை உயர் நீதிமன்றமும் ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்வது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்யும் அவசரச் சட்டத்திற்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.