சென்னை: தமிழ்நாட்டில் இணைய வழி விளையாட்டால் பலர் தற்கொலை செய்துகொண்டனர். இதனை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்தது. அந்த குழுவின் அறிக்கையில் இணைய தள விளையாட்டால் பலரின் உயிர் பறிபோய் உள்ளது, தடுக்காவிடில் பலரின் உயிர் பறிபோகும் ஆகவே தடை செய்ய பரிந்துரையை வழங்கியது.
இதனை செப்டம்பர் மாதம் 26ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் வரைவு அவசர சட்டமாக நிறைவேற்றபட்டது. அதன் பிறகு அக்டோபர் 1ம் தேதி அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஓப்புதல் அளித்தார். பின்னர் இந்த மாதம் 19ம் தேதி சட்டபேரவை கூட்டத்தொடரில் இணையவழி விளையாட்டுகளை நிரந்தரமாக தடைவிதிக்கும் நிரந்தர மசோதா தாக்கல் செய்யபட்டு குரல் வாக்கெடிப்பில் நிறைவேற்றபட்டு, தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு இன்று காலை முதல் இணைய வழி விளையாட்டான ஆண்லைன் ரம்மிக்கு தடை மசோதாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.