தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குழந்தைகளை சீரழிக்கும் ஆன்லைன் விளையாட்டுகள்' - உயர் நீதிமன்றம் வேதனை - Online gambling

சென்னை: ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமல்லாமல், குழந்தைகளையும் சீரழிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

குழந்தைகளை சீரழிக்கும் ஆன்லைன் விளையாட்டுகள்-  உயர் நீதிமன்றம் வேதனை
குழந்தைகளை சீரழிக்கும் ஆன்லைன் விளையாட்டுகள்- உயர் நீதிமன்றம் வேதனை

By

Published : Sep 15, 2020, 5:25 PM IST

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரியும், அதன் விளம்பரங்களில் நடிக்கும் கிரிகெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யக்கோரியும் வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி வழக்கறிஞர் வினோத் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக இன்று (செப்டம்பர் 15) மத்திய தகவல் தொலைதொடர்பு துறை தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி, தனி அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவில்லாமல் எந்த இணையதளத்தையும் தன்னிச்சையாக முடக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் மட்டுமே வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளால் இளைஞர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளையும் சீரழிப்பதாக தெரிவித்தனர். மேலும், பெற்றோர் உறங்க சென்ற பிறகு ஆன்லைனில் விளையாட தொடங்கும் பிள்ளைகள், அதிகாலை வரை விளையாடுவதாகவும், இந்த விளையாட்டுகளுக்கு குழந்தைகளும் அடிமையாவதாகவும் குறிப்பிட்டனர்.

அப்போது, மனுதாரர் சூரியபிரகாசம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டார். இந்த வழக்கில் விராட் கோலி, தமன்னாவை எதிர்மனுதாரர்களாக இணைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இருவரையும வழக்கில் சேர்க்க மறுத்த நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களை மட்டும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டனர்.

மேலும், இது தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details