தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி நூதன மோசடி - ஆன்லைனில் பொருள் வாங்கும் போது உஷார்...!

சென்னை:ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளுக்கு ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான சொகுசு கார் பரிசு விழுந்ததாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

online
online

By

Published : Aug 26, 2020, 12:46 PM IST

சென்னை சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோயில் காந்தி நகரில் வசிப்பவர் சுரேஷ். வீட்டின் அருகே ஓஎம்ஆர் சாலையில் பஞ்சர் கடை நடத்திவருகிறார். கடந்த மாதம் 28ஆம் தேதி ”சினாப் டீல்” (snapdeal) எனும் ஆன்லைன் நிறுவனத்தில் ரூ.350 மதிப்பிலான போர்வையை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த போர்வை வீட்டிற்கு வந்து 20 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், சுரேஷ் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசிய நபர், ஷாப்க்ளூஸ் (SHOPCLUES.COM) நிறுவனத்தில் இருந்து உதவி மேலாளர் சுஜித் பேசுவதாக கூறியுள்ளார். பின்னர், நீங்கள் ஆன்லைனில் வாங்கிய போர்வைக்கு ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான மகேந்திரா எக்ஸ்யூவி 500 (mahindra xuv500) கார் பம்பர் பரிசு விழுந்துள்ளதாக அவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை சுரேஷ் நம்புவதற்காக அவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு, சுஜித்தின் அடையாள அட்டை, பம்பர் பரிசில் விழுந்துள்ள கார் அலங்காரம் செய்யப்பட்டு தயார்நிலையில் இருப்பது போன்ற புகைப்படம், காரின் விலை ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் என்றும், அதில் ஒரு பங்கு டேக்ஸ் கட்ட வேண்டும் எனக் கூறி ரூ.12 ஆயிரத்து 800யை தங்களது வங்கிக் கணக்கிற்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்பதற்கான தகவல்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.

போலியான ஆவணங்கள்

அதேபோல், கார் வேண்டுமென்றாலும் கார் பெற்றுக்கொள்ளலாம் இல்லை என்றால், பணமாக வேண்டுமென்றாலும் பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று அடுக்கடுக்கான ஆசை வார்த்தைகளை கூறி, முதலில் முன்பண தொகையை உடனடியாக அனுப்பும்படி சுரேஷிடம் கூறியுள்ளார், சுஜித்.

தொலைபேசியில் பேசிய நபரின் வார்த்தையில் சிறிது சந்தேகம் ஏற்பட்டதால் அருகில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்குச் சென்ற இதுகுறித்து சுரேஷ் புகார் அளித்துள்ளார்.

சுரேஷ்க்கு சுஜித் அனுப்பிய குறுஞ்செய்தி

இதனையடுத்து சுஜித் எண்ணை தொடர்புகொண்டு போலீசார் பேசும் போது, உஷார் ஆன சுஜித் செல்போனை ஸ்சுவிட்ச் அனைத்து வைத்துள்ளார். அப்பொழுதுதான் மோசடி செய்யும் கும்பல் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆன்லைன் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

போலியான அடையாள அட்டை

பொதுமக்கள் யாரும் இதுபோன்ற போலி இணையதளத்தில் குறைந்த விலைக்கு பொருள்கள் தருவதையோ, அல்லது பரிசு விழுந்ததாகக் கூறி நம்பவைத்து ஏமாற்றும் கும்பலிடம் இருந்து உஷாராக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மியால் கடனாளியான காவலர் தூக்கிட்டு தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details